தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

0 2238

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய்  உயர்ந்துள்ளது.

சென்னையில் கிராம் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை 4 ஆயிரத்து 683 ரூபாயாக இருந்தது. அந்த விலை சனிக்கிழமை 20 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 703 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளிக்கிழமை 37 ஆயிரத்து 464 ரூபாயாக இருந்த சவரன் தங்கம் விலை சனிக்கிழமை 160 ரூபாய் உயர்ந்து, 37 ஆயிரத்து 624 ரூபாயாக உள்ளது.

இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று 1 கிலோ வெள்ளியின் விலை 56 ஆயிரத்து 400 ரூபாயாக இருந்தது. அந்த விலை சனிக்கிழமை 800 ரூபாய் அதிகரித்து 57 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments