வரும் 21ஆம் தேதி, வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி, கண்டன முழக்கம் எழுப்புமாறு திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

0 14188

வரும் 21ஆம் தேதி, வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுமாறும், கண்டன முழக்கம் எழுப்புமாறும் திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா கால மின்கட்டணச் சலுகையை அளித்துள்ள நிலையில், அ.தி.மு.க. அரசு மட்டும் மின் கணக்கீட்டின் அடிப்படையில் கட்டணத்தைச் செலுத்தியே ஆகவேண்டும் என்று சுமையை ஏற்றுவது கருணையற்ற போக்கு என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின்கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தியும், குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எளிய மாதத் தவணையாகச் செலுத்த அனுமதிக்கக் கோரியும் வரும் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு, வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றி, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராட்டம் நடைபெற உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments