திருப்பதியில் வழிபாட்டை நிறுத்தப் பரிந்துரை..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவலைத் தடுக்க பக்தர்கள் தரிசனத்தை நிறுத்த வேண்டும் எனக் காவல்துறை பரிந்துரைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜூன் 8 முதல் மீண்டும் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்ட பின் அங்குப் பணிபுரியும் அர்ச்சகர்கள், காவலர்கள் என 158 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சடகோப ராமானுஜ பெரிய ஜீயர், சடகோப ராமானுஜ சின்ன ஜீயர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கொரோனா பரவலுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் திருமலை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரசாதம் தயாரிக்கும் ஊழியர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் பக்தர்களைத் தரிசனத்துக்கு அனுமதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும், அப்போதுதான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் வழிபாட்டை நிறுத்தப் பரிந்துரை..! #Tirupati | #Tirumala | #Covid19 https://t.co/d0WXaJjEBp
— Polimer News (@polimernews) July 18, 2020
Comments