ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 807

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்திய ராணுவத்தினர் 6 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

சோபியான் மாவட்டத்தின் அம்ஷிபோரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு தேடுதல் வேட்டை நடத்திய ராணுவத்தினர், தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து, பதிலடி தாக்குதல் நடத்தினர். அதில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

குல்கம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி ஒருவன் உட்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் மேலும் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தேடுதல் வேட்டையின் போது ராணுவத்தினர் மூவரும் காயமடைந்துள்ளனர். அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments