சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

0 1248
சென்னையில் தளர்வுகளுக்கு தயாராக இருப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மட்டும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் தற்போது நாளொன்றுக்கு 12,500 முதல் 13,000 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

இதுவரை மொத்தமாக 5 லட்சம் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 5 லட்சம் பரிசோதனைகளை கடந்துள்ள முதல் மாநகராட்சி சென்னை எனவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சென்னையில் தளர்வுகளுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments