12ம் வகுப்பு மறுத்தேர்வு முடிவு, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு - அமைச்சர் செங்கோட்டையன்

0 982
தனியார் பள்ளிகள் உரிமம் புதுப்பிப்பு காலம் 2 ஆண்டாக நீட்டிப்பு -அமைச்சர் செங்கோட்டையன்

12 ஆம் வகுப்பிற்கு 27 ஆம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் தாசப்பகவுண்டன்புதூர் பள்ளியில் சத்துணவுக்காக அரிசி, பருப்புகள் மற்றும் பர்னிச்சர்களையும் விளங்கோம்பை பகுதி பழங்குடியின மாணவர்கள் 19 பேருக்கு சாதிச்சான்றுகளையும் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்புக் காலம், ஊரடங்கை கருத்தில் கொண்டு ஓராண்டில் இருந்து 2 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தமிழகத்தில் 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் இலவச கணினிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் செல்போன் மற்றும் கணினி வழியாக பாடங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் படிக்கும் நிலை 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments