முருகனை அருவருப்பாக நிந்தித்தவர்களை கண்டித்து அறிக்கை வெளியிடாதது ஏன்? - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி

0 2744
ஸ்டாலின் தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன? - SP வேலுமணி

தமிழர் கடவுள் முருகனை அருவருப்பாக நிந்தித்தவர்களை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிடாதது ஏன் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தேர்தல் வரும் போது தான் ஒருவருக்கு அனைத்து தரப்பு மக்களும், அவரது உணர்வுகளும் திடீர் நினைவுக்கு வரும் போலும் என்றும், கோவில் கோவிலாக படியேறும் அரசியல் நேர்த்திக்கடன் நாடகங்களும் அரங்கேறும் என்றும் மறைமுகமாக வேலுமணி விமர்சித்துள்ளார்.

மேலும் அரசின் சார்பில் தமிழர் கடவுள் முருகனை அருவருப்பாக நிந்தித்தவர் மீது கைது உட்பட கடும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் ஸ்டாலின் உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் வேலவன் முருகர் அவமதிப்புக்கு, தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments