கருப்பின இளைஞரை முழங்காலால் கழுத்தில் அழுத்திய காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்

0 1944
இங்கிலாந்தில் கருப்பின இளைஞரை கழுத்தில் முழங்காலால் அழுத்தி கைது செய்த காவலர்

இங்கிலாந்தில் கருப்பின இளைஞரை கழுத்தில் முழங்காலால் அழுத்தி கைது செய்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஸ்லிங்டன் என்ற இடத்தில் சந்தேகப்படும்படி இருந்த கருப்பின இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் அதற்கு அந்த இளைஞர் உடன்பட மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கருப்பின இளைஞரை கீழே தள்ளிய காவலர்களில் ஒருவர் அவரது கழுத்தில் தனது முழங்காலால் அழுத்தினார். இதனால் அந்த கருப்பின இளைஞர் வலியால் கதறினார்.

இதுகுறித்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து குறிப்பிட்ட காவல் துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பின இளைஞரும் இதுபோல கழுத்தில் அழுத்தப்பட்டதில் உயிரிழந்ததால் பெரும்பாலான நாடுகளில் போராட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments