தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 1021
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சோபியான் பகுதியில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து காவல்துறை, துணை ராணுவப் படையினர் கூட்டாக அதிரடி தாக்குதல் தொடுத்தனர்.

தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதையடுத்து அங்கு பலமணி நேரம் சண்டை நீடித்தது. பின்னர் ஜெய்ஷே முகமது அமைப்பைச் சேர்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் படைகள் குவிக்கப்பட்டு மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments