ஸ்கேன் எடுக்க நோயாளியை ஒரு கி.மீ. ஸ்ட்ரெட்சர் மூலம் நடுச்சாலையில் தள்ளிச் சென்ற அவலம்

0 991
ஆந்திராவில் நோயாளிக்கு ஸ்கேன் எடுப்பதற்காக நடுச்சாலையில் ஸ்ட்ரெட்சர் மூலம் தள்ளிச் சென்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்னூல் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நோயாளியை பரிசோதித்த மருத்துவர் அருகில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்துகொள்ள பரிந்துரைத்துள்ளார்.

ஆனால் ஸ்கேன் எடுப்பதற்கு மருத்துவமனை ஊழியர்களும், ஆம்புலன்சும் வர மறுத்த காரணத்தால், அந்த நோயாளியின் உறவினர்களே அவரை ஸ்ட்ரெட்சரில் படுக்க வைத்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடுச்சாலையில் தூரம் தள்ளிச் சென்றனர்.

அரசு மருத்துவமனையில் ஸ்கேனிங் மற்றும் எக்ஸ்ரே வசதி என அனைத்து இருந்தபோதிலும் நோயாளியை வெளியே அனுப்ப காரணம் என்ன என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் நோயாளியை உறவினர்களே தள்ளிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments