தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்

7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்......
தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்றில் ஏற்பட்டுள்ள திசை வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் கரூர், திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வருகிற 22-ம் தேதி வரை கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments