மியான்மர்-இந்திய எல்லையில் நேற்றிரவு நிலநடுக்கம்

0 735

மியான்மர் இந்திய எல்லைப் பகுதியில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5புள்ளி 3 ஆக பதிவானது. வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.முன்னதாக அந்தமான், நிகோபர் தீவுகளையொட்டிய கடல் பகுதியிலும் நேற்று காலை முதல் இரவு வரை நான்கு மிதமான நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன.ரிக்டர் அளவுகோலில் இவை 4 புள்ளி 8 , 5 புள்ளி 1, 5 புள்ளி 6, மற்றும் 5 புள்ளிகள் என்று பதிவாகியுள்ளன.

அந்தமான், நிகோபர் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது இயல்புதான் என்றும் கடந்த ஆண்டில் இரண்டு மூன்று நாட்களுக்குள் 50 நில அதிர்வுகள் ஏற்பட்டன என்றும் புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments