உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மூடப்பட்டது - கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

0 5580
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த சுங்கச்சாவடி மூடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த சுங்கச்சாவடி மூடப்பட்டது. 

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் இந்த சுங்கச்சாவடியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதன் வழியாக தினமும்  சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது .

இந்த நிலையில் நேற்று இங்கு பணியாற்றிய 7 பேருக்கு நோய் தொற்று உறுதியானதை அடுத்து  சுங்கச்சாவடி மூடப்பட்டுள்ளது. அதனால் இந்த சுங்கச்சாவடி வழியாக செலுத்தும் அனைத்து வாகனங்களும் கட்டணமின்றி செல்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments