கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

0 2722
கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

கோவை சுந்தாரபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தவர் பெரியார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! என ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தவர், எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தவர், அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்! எனக் கூறியுள்ளார்.

தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments