சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோர் விகிதம் 80 சதவீதமாக உயர்வு

0 1576
சென்னையில் கொரோனா குணமானோர் விகிதம் 80 சதவீதமாக உயர்வு

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோர் விகிதம் 80 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மாநகராட்சி நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் அந்த விகிதம் 79 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் இன்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் 1 சதவீதம் அதிகரித்துள்ளது.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82 ஆயிரத்து 128ஆகவும்,  குணமானோரின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 748ஆகவும் அதிகரித்துள்ளது.   

கொரோனா பாதித்து 15 ஆயிரத்து 38 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதுதவிர்த்து கொரோனா பாதித்து 1,341 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் கொரோனா பாதித்தோரில் 58 புள்ளி 30 சதவீதம் பேர் ஆண்கள், 41 புள்ளி 70 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.  கொரோனாவால் அதிகபட்சமாக 30 முதல் 39 வயதுக்குட்பட்டோர் 18 புள்ளி 62 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனானாவுக்கு அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில்  2 ஆயிரத்து 77 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments