ராஜஸ்தானில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசிய பாஜக..? வழக்குப் பதிவு செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

0 781

ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றது தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பன்வார் லால் சர்மாவிடம் பாஜகவைச் சேர்ந்த சஞ்சய் ஜெயின், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆகியோர் பணம் தருவதாகக் கூறி விலை பேசுவதாக கூறப்படும் ஒலிப்பதிவு வெளியாகியுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களான பன்வார் லால் சர்மா, விஸ்வேந்திர சிங் ஆகியோர் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிந்த ராஜஸ்தான் காவல்துறையினர் சஞ்சய் ஜெயினைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற புகாரில்தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மீது வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணையில் தலையிட்டால் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜிவாலா வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments