சடலமாக கண்டெடுக்கப்பட்ட 7 வயது சிறுமி கழுத்து இறுக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக உடற்கூறு ஆய்வில் தகவல்

0 7002

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கல்விளையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 7 வயது சிறுமி கழுத்து இறுக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல் செய்யப்படவில்லை என்றும் உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிறுமியின் சடலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவர்களால் உடல்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், சிறுமியின் தாய்க்கு வீடு கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சடலத்தை உறவினர்கள் வாங்க மறுத்தனர். அவர்களை அழைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை 2 தவணையாக அளிக்கப்படும், இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுமென அறிவித்தார்.

இதில் முதல் தவணையாக 4 லட்சத்தி 12 ஆயிரத்து 500 ரூபாய் காசோலை, வீட்டு மனைபட்டாவை அளித்தார். இதையடுத்து சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments