ட்ரம்பை விமர்சித்து அவரது உறவினர் எழுதியுள்ள புத்தகம் விற்பனையில் புதிய சாதனை

அமெரிக்க அதிபர் டிரம்பை விமர்சித்து அவரது அண்ணன் மகள் எழுதியுள்ள புத்தகத்தின் அனைத்து பிரதிகளும், விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே விற்றுவிட்டதாக அதன் வெளியீட்டாளர் சைமன் அண்ட் ஸ்கஸ்டர் தரப்பில் தெரிவிக்கப்படு உள்ளது.
மேரி டிரம்ப் எழுதியுள்ள too Much and Never Enough: How My Family Created the World's Most Dangerous Man என்ற புத்தகமானது, கடந்த செவ்வாயன்று விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் புக்கிங் விற்பனை, இ-புக் மற்றும் ஆடியோ என 9 லட்சத்து 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி முதல்நாள் விற்பனையில் சாதனை படைத்துள்ளதாக வெளியீட்டாளர் தரப்பு அறிவித்துள்ளது. இந்தப் புத்தகத்தில் ட்ரம்ப் மோசமானவராக சித்தரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments