ஐ.பி.எல். போட்டிகள் எப்போது?

0 5729
இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை

ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

காணொலி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில்,  கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் நிர்வாகிகள் 11 அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இந்திய அணி எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை.

இந்திய அணிக்குரிய இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்த போட்டிகளை வேறு தேதியில் நடத்துவது குறித்தும், ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளை எப்போது நடத்துவது என்பது  குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments