8 வயது சிறுமி கொலை வழக்கில் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

0 1452
அரசு சார்பில் ரூ.4.28 லட்சம், வீட்டுமனைப் பட்டா வழங்க முடிவு

சாத்தான்குளத்தில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். 8 வயது சிறுமி கொல்லப்பட்டது தொடர்பாக அதே பகுதியை முத்தீஸ்வரன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்குப் பின் சிறுமியின்  உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனபிரியா தலைமையில் வருவாய் துறையினர், சிறுமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தால் உடலை பெற முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதற்கு அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்காததை அடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

முன்னதாக வன்கொடுமையால் பாதிகப்பட்டவருக்கான நல நிதியில் முதற்கட்டமாக 4 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மற்றும் தற்போது வசிக்கும் வீட்டுக்கான மனைப்பட்டா,சிறுமியின் 10வயது சகோதரனுக்கு தேவையான படிப்பு செலவு  ஆகியவை அரசு சார்பில் வழங்க பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments