மும்பையில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

0 849

மும்பையில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பெய்துள்ள கனமழையால் பழைய கட்டடங்கள் இடிந்து விழும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

நேற்று ஒரே நாளில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே மற்றும் மலாட் மால்வானி பகுதியில் உள்ள இருவேறு இடங்களில் இரண்டு கட்டடங்கள் இடிந்துவிழுந்ததில் இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர் .பேரிடர் மீட்புப் படையினர் கடும் முயற்சியுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இதில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர்.23 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் பலத்த காயங்களுடன் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட காட்சிகள் விபத்தின் கொடுமையை விளக்குவதாக இருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments