காஷ்மீரில் பதுங்கியிருந்த மூன்று தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்

0 838
தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர்

காஷ்மீரில் பதுங்கியிருந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டத்தில் நாக்னாத்-சிம்மர் பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சேர்ந்து  தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில்  3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்டவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்படாத நிலையில், பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments