' வீர மார்த்தாண்ட நல்லூர் என்று 'சாத்தான்'குளம் பெயரை மாற்ற வேண்டும்'- ஊர் மக்கள் விருப்பம்

0 45206

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  சாத்தான்குளம் நகரத்துக்கு இதுவரை  பெரியதாக எந்த அடையாளமும் இருந்ததில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரி ஆனந்தன் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது, சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதி அந்தஸ்த்தையும் இழந்து விட்டது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியாக சாத்தான்குளம் நகரம் உள்ளது.

தூத்துக்குடியிலிருந்து 70 கி.மீ தொலைவிலும் திருச்செந்தூரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும் சாத்தான்குளம் நகரம் உள்ளது. பெரியதாக வன்முறை சம்பவங்கள் நடக்காத சிறிய நகராகவும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சந்தை பகுதியாகவும் சாத்தான்குளம் இருந்து வந்தது. இந்த நகரில் நடந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் கொலையால் சாத்தான்குளம் என்ற பெயர் பட்டி தொட்டியெல்லாம் பரவி ஐ.நா. சபை வரைக்கும் எட்டியுள்ளது ஐ.நா சபை பொதுச் செயலாளர் அண்டானியோ கட்டர்ஸ் , சாத்தான்குளம் போலீஸாரின் அராஜகம் குறித்து அசிர்ச்சி தெரிவித்திருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை காரணமாக தங்கள் ஊரின் பெயர் கெட்டுவிட்டதாக சாத்தான்குளம் மக்கள் கருதுகின்றனர். தங்கள் ஊரின் பெயரிலேயே 'சாத்தான்' என்ற சொல் இருப்பதுதான் இதற்கு காரணம் என்றும் ஊர் மக்கள் நினைக்கின்றனர். சாத்தான்குளம் ஊர்  பழங்காலத்தில் திருக்கொழுந்துபுரம் என்றும் வீர மார்த்தாண்ட நல்லூர் என்வும் அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது, வீரமார்த்தாண்ட நல்லூர் என்ற பழைய பெயரிலேயே சாத்தான்குளம் அழைக்கப்பட வேண்டும். சாத்தான்குளம் என்ற பெயர் மாற்றப்பட வேண்டுமென்று அந்த நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெயர் மாற்றுவது குறித்து சாத்தான்குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வேணுகோபால் என்பவர் கூறுகையில், '' 17 வது நூற்றாண்டு வரையில் வீர மார்த்தாண்ட நல்லூர் என்றே சாத்தான்குளம் அழைக்கப்பட்டது. இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே வர்த்தகம் நடைபெறும் முக்கிய பகுதியாகவும் சரக்குகளை கொண்டு வந்து சாத்தி வைக்கும் இடமாகவும் இந்த ஊர் இருந்துள்ளது. இதனால், சாத்துகுளம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் பின்னர் சாத்தான்குளம் என்று ஆனதாகவும் சொல்கிறார்கள் '' என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments