கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிப்பு

0 8491
தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வரும் 20 ஆம் தேதி துவங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், முதலமைச்சரின் உத்தரவுப் படி, புதிய முயற்சியாக, கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngsa.in  அல்லது www.tndceonline.org  என்ற இணையதளத்திலும், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு www.tngptc.in  அல்லது www.tngptc.com என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 044-22351014 மற்றும் 044-22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments