ம.பி.யில் விவசாயி மீது காவல்துறையினர் தாக்குதல்

0 1446

மத்தியப் பிரதேசத்தில் விவசாயியைக் காவல்துறையினர் தாக்கியது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரைப் பதவியில் இருந்து நீக்கியதுடன் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குணா மாவட்டத்தில் விவசாயி ராஜ்குமார் அகிர்வார் அரசு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிட்டு வந்தார். இந்நிலையில் அந்த இடத்தில் கல்லூரி கட்டுவதற்காகப் பயிர்களை அழிக்க வந்த காவல்துறையினரை ராஜ்குமார் அகிர்வாரும் அவர் மனைவி சாவித்திரியும் தடுத்தனர்.

முறைப்படி குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும், வங்கிக் கடன்வாங்கிப் பயிரிட்டுள்ளதாகவும், பயிர்களை அறுவடை செய்தபின் வெளியேறிவிடுவதாகவும் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த காவல்துறையினர் அவர்களை அடித்து உதைத்தனர். இதையடுத்து விவசாயியும் அவர் மனைவியும் பூச்சிக்கொல்லியைக் குடித்தனர்.

இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து மாவட்ட ஆட்சியர் விஸ்வநாதன், காவல் கண்காணிப்பாளர் தருண் நாயக் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு தொடர்பாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி 30 நாட்களில் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments