இந்தியாவால், உலகிற்கே கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் - பில் கேட்ஸ் புகழாரம்

0 20076
இந்தியாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களால், இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கே கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என மைக்ரோப்ட் நிறுவனரும் உலகப்பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களால், இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கே கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என மைக்ரோசாப்ட் நிறுவனரும் , உலகப்பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவின் மக்கள் தொகை, கொரோனாவை கட்டுப்படுத்த மிகப்பெரும் சவாலாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இறப்பு விகிதாச்சாரத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம், இந்திய அரசுடன் இணைந்து, உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் , கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்குவதாக தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments