கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலைச் சேர்ந்த சுரேந்தர் புதுச்சேரி போலீசாரிடம் சரண்

0 21739
கந்த சஷ்டி பாடல் குறித்து ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், கறுப்பர் கூட்டம் எனும் யூ ட்யூப் சேனலை சேர்ந்த ஒருவர் புதுச்சேரி காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.

கந்த சஷ்டி பாடல் குறித்து ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், கறுப்பர் கூட்டம் எனும் யூ ட்யூப் சேனலை சேர்ந்த ஒருவர் புதுச்சேரி காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.

கறுப்பர் கூட்டம் என்ற யூ ட்யூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனல் மீதும், நிர்வாகிகள் மீதும் தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

சாதி, மத, இன ரீதியான மோதலை தூண்டுவது, அவதூறு பரப்புதல் உட்பட 5 பிரிவுகளில், கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கறுப்பர் கூட்டம் நிர்வாகிகளில் ஒருவரான வேளச்சேரியை சேர்ந்த செந்தில் வாசன் என்பவரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், தேடப்பட்டு வந்த, கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலைச் சேர்ந்த சுரேந்தர் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். சென்னையை சேர்ந்த சுரேந்தர், புதுச்சேரியில் சரணடைந்த நிலையில், தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments