செப்டம்பர் முதல் நாளில் கொரோனா பாதிப்பு 35 லட்சமாக இருக்கும் : பெங்களூர் இந்திய அறிவியல் மையம்

0 4583
இந்தியாவில் செப்டம்பர் முதல் நாளில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 35 லட்சமாக இருக்கும் எனப் பெங்களூர் இந்திய அறிவியல் மையம் கணித்துள்ளது.

இந்தியாவில் செப்டம்பர் முதல் நாளில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 35 லட்சமாக இருக்கும் எனப் பெங்களூர் இந்திய அறிவியல் மையம் கணித்துள்ளது.

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையத்தைச் சேர்ந்த வல்லுநர்கள், வெவ்வேறு சூழலில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என ஓர் ஆய்வை நடத்தியுள்ளனர். அதில் இப்போதுள்ள வேகத்தில் கொரோனா பரவினால் செப்டம்பர் முதல் நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 35 லட்சமாகவும், கர்நாடகத்தில் 2 லட்சத்து 10 ஆயிரமாகவும் இருக்கும் எனக் கணித்துள்னர்.

அப்போது இந்தியாவில் 10 லட்சம் பேரும், கர்நாடகத்தில் 71 ஆயிரத்து 300 பேரும் சிகிச்சை பெறும் நோயாளிகளாக இருப்பர் எனக் கணித்துள்ளனர்.

இதைவிடச் சிறப்பாகத் தடுப்புப் பணிகளை மேற்கொண்டால் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

மோசமான சூழல் நிலவினால் 2021 மார்ச்சில் மொத்தப் பாதிப்பு 6 கோடியே 18 லட்சமாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 28 லட்சமாகவும், சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 82 லட்சமாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments