நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி டெல்லியில் கைது

0 1104
டெல்லியில் பதுங்கியிருந்தவனை போலீசார் மடக்கி கைது செய்தனர்

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான அன்வர் தாகூரை டெல்லியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி காவல்நிலையத்தில் வைத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கும் நபரை சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மீரட், டெல்லி ஆகிய இடங்களில் நடைபெறும் பல்வேறு வழக்குகளிலும் அவன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வழக்கு ஒன்றில் பரோலில் வெளியே வந்து தலைமறைவான அவன், சாந்த்பாக்கிலுள்ள வாசாரிபாத் சாலை பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு போலீசார் மறைந்திருந்தநிலையில், இதை அறியாத வந்த அன்வர் தாகூரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments