கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

0 1188
அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள மருத்துவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை நடத்த, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனநல காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்து வருவதாகவும், எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை என்று தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், மனநல காப்பகத்தில் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிறப்பு கவனம் வழங்க வேண்டியது அவசியம் என்பதை மனுதாரர் தரப்பு வலியுறுத்தியது.

இதை ஏற்ற நீதிபதிகள், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் மதிப்பது போலத்தான் அவர்களையும் நினைக்க வேண்டும் என குறிப்பிட்டு, மனநல காப்பகத்தில் சிகிச்சையில் உள்ள சுமார் 800 பேருக்கு மட்டுமல்லாமல், அங்கு பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டன்கள், சமையல்காரர்கள் என அனைவருக்கும் ஒரு வாரத்திற்குள் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments