தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

0 2634
சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் - புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் நாளை அன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு ஜூலை 16, 17ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments