ஊரடங்கு கால மின்கட்டணத்தை குறைக்கக் கோரி, திமுக போராட்ட அறிவிப்பு

0 753
ஜூலை 21ல் வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டம்

ஊரடங்கு கால மின்கட்டணத்தை  குறைக்கக் கோரியும், அதை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்க கோரியும் வரும் 21ஆம் தேதி வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தை திமுக அறிவித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட  செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் “மின்சார திருத்தச் சட்டம் மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறுமாறும், கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியிடம்  தாரைவார்த்திடக் கூடாது, ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

‘ரீடிங்’ எடுத்ததில் உள்ள குழப்பங்களை மின் நுகர்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு, ஊரடங்கு கால மின்கட்டணத்தை  குறைக்கக் கோரி வரும் 21ஆம் தேதி, வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றி, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments