ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களை 25 மாவட்டங்களாக பிரிக்க ஒருமனதாக தீர்மானம்

0 3099
ஆந்திர மாநிலத்தில் மாவட்டங்களை அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

ஆந்திர மாநிலத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கையை 25ஆக அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமராவதியில் நேற்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து அமைச்சர் பேர்னி நானி செய்தியாளர்களிடம் விவரித்தார்.

அப்போது பேசிய அவர், தற்போது உள்ள 13 மாவட்டங்களை 25 மாவட்டங்களாக பிரிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செயப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மாவட்டங்களை பிரிக்க தனியாக ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments