மதிப்பெண் மறுகூட்டலுக்கும் பயின்ற பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம்

0 1553
விடைத்தாள் நகல் பெற, பயின்ற பள்ளியில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம். மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற தேர்வை எழுதாதவர்களுக்கு, வரும் 27ஆம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளது. மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதற்குப் பின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலம், தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதி, மாதம், வருடத்தினைப் பதிவுசெய்து, தேர்வுமுடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வுமுடிவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வுமுடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். இதற்கானதேதிபின்னர் அறிவிக்கப்படும்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.இதற்கான தேதி மற்றும் வழிமுறைகள்பின்னர் அறிவிக்கப்படும்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாட்களில், தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மறுதேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு மட்டும், மறுதேர்வுமுடிவடைந்த பின், தேர்வெழுதிய அனைத்து பாடங்களுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments