ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 2432 பேருக்கு கொரோனா..!

0 699

ஆந்திர மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 432 பேருக்கு கொரோனா உறுதியாகி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 451ஆக உயர்ந்துள்ளது.

18 ஆயிரத்து 378 பேர் சிகிச்சை முடிந்து சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 452ஆக உயர்ந்துள்ளது. 16 ஆயிரத்து 621 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. ஏற்கனவே திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 91 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், நேற்று மேலும் 4 அர்ச்சகர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 12 ஆயிரத்து 500 முன்பதிவு டிக்கெட்டுகள் இருந்தபோதும் தொற்று காரணமாக வெறும் 5,000 பக்தர்கள் மட்டுமே வருகை தந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments