ஜியோ 5ஜி சேவை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் - அம்பானி

0 2657

நூறு சதவித உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த, 5ஜி இணைய சேவையை வழங்க உள்ளதாக, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

அக்குழுமத்தின் 43 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசியவர், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவைக்கான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், அதற்கான சோதனைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், 5ஜி சேவைக்கான அலைக்கற்றை உரிமம் கிடைத்ததும், இத்திட்டம் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும் எனவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். இந்திய தொலைத் தொடர்பு துறையில் நிலவும் நிதிப்பற்றாக்குறை காரணமாக, 5ஜி அலைக்கற்றை ஏலம் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments