பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

0 19806

பிளஸ் 2 தேர்வில் 92.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள், 5.39 சதவீதம் அளவுக்கு அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 24ஆம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. பள்ளி மாணாக்கர்களாக 7,79,931 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவிகளின் எண்ணிக்கை 4,24,285, மாணவர்களின் எண்ணிக்கை 3,55,646. மொத்தம் 92.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் 94.80 சதவீதமும், மாணவர்கள் 89.41 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட, மாணவிகள் 5.39 சதவீதம் அளவுக்கு அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர். 7 ஆயிரத்து 127 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணாக்கர்கள் தேர்வு எழுதியதில், 2 ஆயிரத்து 120 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை காட்டியுள்ளன.

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 85.94 % ஆகவும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 94.30 % ஆகவும், மெட்ரிக் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 98.70 % ஆகவும், இரு பாலர் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 92.72 % ஆகவும், பெண்கள் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 94.81 % ஆகவும், ஆண்கள் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 83.91 % ஆகவும் உள்ளது.

இயற்பியலில் 95.94 % பேரும், வேதியியலில் 95.82 % பேரும், உயிரியலில் 96.14 % பேரும், கணிதத்தில் 96.31 % பேரும், தாவரவியலில் 93.95 % பேரும், விலங்கியலில் 92.97 % பேரும், கணினி அறிவியலில் 99.51 % பேரும், வணிகவியலில் 95.65 % பேரும், கணக்குப் பதிவியலில் 94.80 % பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் 97.12 % பெற்று திருப்பூர் முதலிடத்திலும், 96.99 % பெற்று ஈரோடு இரண்டாமிடத்திலும், 96.39 % பெற்று கோவை மூன்றாமிடத்திலும் உள்ளன. குறைந்தபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 77.74 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 91.30 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதைவிட அதிகரித்து 92.34 சதவீதமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments