இந்திய ராணுவத்துக்கு ரூ.300 கோடி மதிப்பில் உடனடி ஆயுதக் கொள்முதலுக்கு அனுமதி

0 2452

இந்திய ராணுவத்துக்கு 300 கோடி ரூபாய்க்கு உடனடி ஆயுத கொள்முதலுக்கான சிறப்பு நிதி அதிகாரத்தை பயன்படுத்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடிய டிஏசி எனப்படும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இதில் வடக்கு எல்லைகளில் நிலவும் சூழ்நிலை மற்றும் எல்லைகளை பாதுகாப்பதற்காக ஆயுதப்படைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவசரகால திட்டத்தின்படி 300 கோடி ரூபாய் மதிப்பில் உடனடி ஆயுதக் கொள்முதலுக்கு அனுமதியளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதில் வாங்கப்படும் ஆயுதங்களை ஆறு மாதங்களுக்குள் ஆர்டர் செய்து ஒரு வருடத்திற்குள் வாங்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments