சென்னையில் இன்று 1,291 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

0 1531
தமிழகத்தில், ஒரே நாளில் 4 ஆயிரத்து 496 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆன நிலையில், சென்னை நீங்கலாக மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்து 205 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில், ஒரே நாளில்  4 ஆயிரத்து 496 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆன நிலையில், சென்னை நீங்கலாக மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்து 205 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் புதிதாக ஆயிரத்து 291 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. சென்னையில் மட்டும் சுமார் 81 ஆயிரம் பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேநேரம், 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பியுள்ளனர். அண்டை மாவட்டங்களான திருவள்ளூரில் அதிகபட்சமாக 278  பேருக்கும் ,செங்கல்பட்டில்  186 பேருக்கும் , காஞ்சிபுரத்தில்163 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆனது.

மதுரையில் 341 , தூத்துக்குடியில் 269 , கோவையில் 104 மற்றும் சிவகங்கையில் 100 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments