போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக்க தடை விதிக்க முடியாது-சென்னை உயர்நீதிமன்றம்

0 2206

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டப்பூர்வ வாரிசுகளை விசாரிக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

நினைவில்லத்தை பார்வையிட மக்கள் வருவார்கள் என்பதால் எதிர்ப்பதாகவும், அச்சத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்ற பல தலைவர்களின் இல்லங்கள் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அரசின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments