9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்கள், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படுமென்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென்றும் தெரிவித்துள்ளது.
Comments