நடிகர் ரஜினிகாந்த் வருகிற நவம்பர் மாதம் கட்சி தொடங்க வாய்ப்பு-கராத்தே தியாகராஜன்

0 2986

நடிகர் ரஜினிகாந்த் தனிக் கட்சி தான் தொடங்குவார் என அவரது ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆகஸ்ட் மாதம் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான திட்டம் இருந்ததாகவும், கொரோனா ஊரடங்கு காரணமாக அவை தள்ளிப்போவதாகவும் தெரிவித்தார்.

வருகிற நவம்பர் மாதத்திற்குள் நிச்சயமாக ரஜினிகாந்த் கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறிய கராத்தே தியாகராஜன், டெல்லி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு பேசுவது உண்மை தான் எனவும், அவர்கள் நட்பு ரீதியிலாக பேசுவதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments