சென்னையில் கொரோனாவிலிருந்து குணமாவோர் விகிதம் 79 சதவீதமாக அதிகரிப்பு

0 1044

சென்னையில் கொரோனாவில் இருந்து குணமாவோரின் விகிதம் 79 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சி நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் அந்த விகிதம் 77 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் இன்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் 2 சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 79,662ஆகவும், குணமானோரின் எண்ணிக்கை 62,552ஆகவும் உயர்ந்துள்ளது. இதுதவிர 15,814 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 1,295 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் கொரோனா பாதித்தோரில் 57 புள்ளி 97 சதவீதம் பேர் ஆண்கள், 42 புள்ளி பூஜ்யம் 3 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

சென்னையில் கொரோனாவால் 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டோரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,199 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments