மத்திய பிரதேசத்தில் மேம்பாலத்தின் நடுபகுதியில் படுத்திருந்த புலியால் போக்குவரத்து பாதிப்பு

0 1602

மத்திய பிரதேச மாநிலத்தில் மேம்பாலத்தின் நடுபகுதியில் புலி படுத்திருந்த காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

சியோனி மாவட்டத்திலுள்ள பெஞ்ச் தேசிய பூங்கா பகுதி வழியே செல்லும் என்.ஹெச்.7 சாலையில் 13ம் தேதி இரவு வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த வழித்தடத்திலுள்ள மேம்பாலத்தின் நடுபகுதியில் பெரிய புலி ஒன்று படுத்திருந்தது.

வாகனங்கள் விளக்கு வெளிச்சங்களுடன் நிற்பதை கண்டும் புலி நகராமல் படுத்திருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடம் விரைந்து வந்தனர். இருப்பினும் சிறிது நேரம் கழித்த பிறகே புலி அங்கிருந்து அமைதியாக எழுந்து சென்றது. வாகன ஓட்டிகளை புலி தாக்கவோ அல்லது அச்சுறுத்தவா இல்லை. இக்காட்சியை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட சமூக இணையதளங்களில் அது வேகமாக பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments