நகைக்கடன் விவகாரம் - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

0 2295

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்க வேண்டாம் என்று தமிழக அரசின் சார்பிலோ, கூட்டுறவுத்துறை சார்பிலோ எந்தச் சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேசிய அவரிடம் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்க வேண்டாம் எனச் சுற்றறிக்கை வந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தனக்குத் தெரிந்தவரையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்க வேண்டாம் என அரசு சார்பிலோ, கூட்டுறவுத்துறை சார்பிலோ எந்தச் சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments