டேராடூன் அருகே கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து-3 பேர் உயிரிழப்பு

0 618

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி, 3 பேர் உயிரிழந்தனர்.

டேராடூன் அடுத்த சுக்குவாலா பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி மூவர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் இடிபாடுகளுக்கு சிக்கிக் கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் எனக் கூறப்படுகிறது. மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எந்தவிதமான கட்டிடம், உள்ளே எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments