F1 விசா தொடர்பான உத்தரவை ரத்து செய்தது டிரம்ப் அரசு

0 1500

வெளிநாட்டு மாணவர்களுக்கு விசாவில் கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இணையவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு விசா ரத்து செய்யப்படும் என்றும் அவர்கள் நேரடி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

ஆன்லைனில் படிக்கும் மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதால் பல லட்சம் இந்திய மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இது குறித்த இந்தியாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திருத்தம் செய்யப்படும் என்றும் அதிபர் டிரம்ப் உறுதியளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஹாவர்டு, எம்.ஐ.டி , பல்கலைக்கழகங்கள், கலிபோர்னியா கல்லூரிகள் மற்றும் 17 மாநிலங்கள் சார்பில் கூட்டாக நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் விசா தொடர்பான அரசாணையை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments