அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து 50 ஆயிரம் கொரோனா உயிரிழப்புகளை கடந்த இங்கிலாந்து

இங்கிலந்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்நாட்டின் புள்ளி விவரங்களுக்கான அலுவலகம், இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 28 முதல் ஜூலை 3 வரை 50 ஆயிரத்து 548 பேர் அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து சுகாதாரத்துறையின் தரவுகளில் இருந்து வேறுபடும் இந்த புள்ளி விவரங்கள், அனைத்து விதங்களிலும் வைரசின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை இணைத்து வெளியிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து இங்கிலாந்தும் 50 ஆயிரம் உயிரிழப்புகளை கடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments