இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியாவிற்கு உள்நாட்டு அணுசக்தி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பான, ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான 15வது உச்சி மாநாடு வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகள் தொடர்பான ஆராய்ச்சியை இந்திய தரப்பிலும் தொடர ஒத்துழைப்பு அளிக்கப்படும் என தெரிவித்தனர்.
13 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு அணுசக்தியை அமைதிக்காக பயன்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் இன்று நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments