இன்று வெளியாகிறது சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

0 3170

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முடிவுகளையும், மதிப்பெண் பட்டியலையும், cbseresults.nic.in.என்ற சிபிஎஸ்இ-யின் இணைய தளத்தில் காணலாம்.

இந்த ஆண்டு சுமார் 18 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவை எதிர்நோக்கி உள்ளனர். சிபிஎஸ்இ-ன் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. 88.78 சதவிகித பேர் அதில் தேர்ச்சி பெற்றனர். முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில மணித்துளிகளில் சிபிஎஸ்இ-ன் இணையதளம் முடங்கி 2 மணி நேரத்திற்குப் பிறகு சரியானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments